Lifestyle and human interest
உதவித்தொகையை உயர்த்த மா.திறனாளிகள் போராட்டம்

தர்மபுரி: தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனா-ளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி வழங்-கக்கோரி, மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே, மாநிலம் தழுவிய சிறை நிரப்பும் போராட்டம் நேற்று நடந்தது.
மாவட்ட தலைவர் தமிழ்செல்வி தலைமை வகித்தார். செயலாளர் மாரிமுத்து, பொருளாளர் மாதேஷ் ஆகியோர் பேசினர்.தமிழக பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை உயர்வு இல்லை. மாதாந்திர உதவித் தொகை, 6,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். தமிழகத்தின் அண்டைய மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானா, புதுச்-சேரி உள்ளிட்ட மாநிலங்களில் உதவித்தொகை உயர்த்தி வழங்குகின்றனர். தமிழகத்தில் கடந்த, 4 ஆண்டு களாக எந்தவித உயர்வும் இதுவரை இல்லை.
தமிழகத்தில், த.வெ.க., அரசு, 3,000 முதல், 6,000 ரூபாய் வரை மாதாந்திர உதவித்தொகையாக உயர்த்தி வழங்குவதாக உறுதி அளித்தது. ஆனால், தற்போது பட்ஜெட்டில் மாதாந்திர உதவி தொகை உயர்வுக்கான எந்தவித அறிவிப்பும் இல்லை. விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், 100 நாள் வேலை இழப்பு, ரேஷன் அரிசி குறைப்பு உள்ளிட்ட பிரச்னைகளால், மாற்-றுத்திறனாளிகள் கடுமையான நெருக்கடிக்கு ஆளாகி உள்ளனர்.
எனவே, மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதார பிரச்னைகளை கண்டுகொள்ளாத தமிழக அரசை கண்டித்தும், உதவித்தொகையை உயர்த்தி வழங்கக்கோரியும் சிறை நிரப்பும் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். இதில், 118 பெண்கள் உட்பட, 240 பேர் கைது செய்யப்பட்டு, மாலையில் விடு-விக்கப்பட்டனர்.
