Politics
மக்கள் தொடர்பு முகாம்
தேனி, செப்.10–தேனி தாலுகா கொடுவிலார்பட்டி வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட பாலகிருஷ்ணாபுரத்தில் கலெக்டர் வைத்திநாதன் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது.
முகாமில் 92 பயனாளிகளுக்கு ரூ.2.94 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 86 பேர் மனு அளித்தனர். பெரியகுளம் சப்கலெக்டர் தவ்லேந்து, சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் கவிதா, கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் கிரிஜா, தோட்டக்கலை் துணை இயக்குநர் நிர்மலா, நில அளவைத்துறை உதவி இயக்குநர் அப்பாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.