Politics
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட விடமாட்டோம்: சீமான்
புதிய தலைமைச் செயலகம் குறித்து சீமான் பேசியது தொடர்பாக..

சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட விடமாட்டோம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (செப். 16) தெரிவித்தார்.
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களுடன் சீமான் பேசியதாவது:
''மீனம்பாக்கம் விமான நிலையமே நமக்கு போதுமானது. திருச்சி விமான நிலையத்தில் என்ன பிரச்னை? தூத்துக்குடியும் அதுபோல்தான்.
ரூ. 2 ஆயிரம் கோடி செலவழித்து கட்டப்பட்ட விமான நிலையத்தில் இன்டிகோவின் ஒரே விமானம்தான் ஓடுகிறது. 5 ஆயிரம் ஏக்கரில் விமான நிலையம் கட்டியே தீர வேண்டும் என இருப்பது ஏன்?
தமிழ்நாட்டிற்கு ரூ. 13.5 லட்சம் கோடி கடன் உள்ளது என்று தவெக நிதியமைச்சர்தான் கூறுகிறார். இந்த நிலையில் புதிய சட்டப்பேரவை கட்டடம் எதற்கு? பல மேதைகள் அந்த கட்டடத்தில் அமர்ந்துதான் நல்லாட்சியை கொடுத்துவிட்டுச் சென்றனர். பலபுதிய திட்டங்களும் பிறந்தன.
நவீன வசதிகளுடன் வேண்டுமென்றால் ஓமந்தூராரில் கட்டப்பட்டுள்ள கட்டடத்தை பயன்படுத்திக்கொள்ளலாம். அது நவீன வசதிகளுடன் கட்டப்பட்டதுதானே.
டிவி நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி கூறியது பொதுவான கருத்து. அது ஆளும் கட்சியை மட்டுமே குறிப்பிடுகிறதா? அதற்கு முந்தைய ஆட்சியாளர்களை சாராதா? அரசியல் தெரிந்தவர்கள் விஜய் சேதுபதி பேசியதை அரசியலாக்கமாட்டார்கள்.
தேவையில்லாத அச்சத்தை வைத்துக்கொண்டு மக்கள் போராட வேண்டாம். ஒன்றும் நடக்கப்போறதில்லை. நடக்கவும் விடமாட்டோம்'' என சீமான் பேசினார்.
We will not allow the new Secretariat to be built at Pattinapakkam: Seeman
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.