Religion
விநாயகர் சிலை கரைப்பு
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு விநாயகர் சதுர்த்தி அன்று விளாச்சேரி
நான்கு கரை குலாலர்கள் சார்பில் களிமண் விநாயகர் சிலை வழங்கப்பட்டது. அந்த களிமண் சிலை
மூலஸ்தானத்தில் உள்ள கற்பக விநாயகர் முன்பு வைத்து பூஜை செய்யப்பட்டது. நேற்று அந்தச்சிலை பல்லக்கில் மேளதாளங்கள் முழங்க எடுத்துச் செல்லப்பட்டு, சரவணப் பொய்கை தண்ணீரில் கரைக்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.