Politics
நவ., 1க்குள் உரிமம் இல்லாத துப்பாக்கிகளை ஒப்படைக்க முதல்வர் சிவகுமார் உத்தரவு

பெங்களூரு: ''உரிமம் இல்லாமல் துப்பாக்கி வைத்திருப்போர், நவம்பர் 1க்குள் திரும்ப ஒப்படைக்க வேண்டும்,'' என, முதல்வர் சிவகுமார் உத்தரவிட்டுள்ளார்.
பெங்களூரு, மல்லேஸ்வரம் வன பவனில் நேற்று நடந்த, தேசிய வன தியாகிகள் தினத்தில், முதல்வர் சிவகுமார் பேசியதாவது:
இத்துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கான படி தொகை குறித்த, அமைச்சர் ராமலிங்கரெட்டியின் கோரிக்கை பரிசீலிக்கப்படும்.
ராஜ்குமார் கடத்தல் எனது கிராமம், வீடு அனைத்தும் வனத்துடன் பிணைந்தது. அர்க்காவதி ஆற்றில் மீன்பிடித்தது இன்றும் நினைவில் உள்ளது.
எஸ்.எம்.கிருஷ்ணா முதல்வராக இருந்த போது, அவரிடம் சென்று எனக்கு வனத்துறையை ஒதுக்கும்படி கேட்டேன். ஆனால், என்னை விவசாயத்துறை அமைச்சர் ஆக்கினார். அந்த காலகட்டத்தில் தான், ராஜ்குமார் கடத்தல் சம்பவம் நடந்தது.
வன எல்லையில் வசிக்கும் மக்களுடன், நட்புறவு சூழலை வன ஊழியர்கள் உருவாக்க வேண்டும்.
வன அதிகாரிகள் சில விஷயங்களில் வரம்பு மீறி நடந்து கொள்கின்றனர். வனத்துறை வருமானத்தை அதிகரிக்க, திட்டத்தை கொண்டு வந்துள்ளேன். இத்திட்ட வெற்றிக்காக அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும்.
200 யானைகள் கபினி அணை நீர்தேக்க பகுதிக்கு சென்ற போது, 200க்கும் மேற்பட்ட யானைகளை பார்த்தேன். மனிதர்களுக்கும், பசுமைக்கும் இடையே சிறப்பான உறவு உள்ளது.
உரிமம் இல்லாத துப்பாக்கிகளை வேட்டைக்கு எடுத்து செல்வோரால், வன ஊழியர்கள் தங்கள் உயிர்களை இழக்கின்றனர்.
எனது தொகுதியான கனகபுராவில், 300க்கும் மேற்பட்ட சட்டவிரோத துப்பாக்கிகள் திரும்ப பெறப்பட்டன. இதுபோன்று உரிமம் இல்லாமல் துப்பாக்கி வைத்திருப்போர், நவம்பர் 1ம் தேதிக்குள் திரும்ப ஒப்படைக்க வேண்டும். இல்லையெனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.