Politics
ரயிலில் மொபைல்போன் திருடிய யூடியூபர் கைது

திருச்சி: ரயிலில் மொபைல்போன் திருடிய 'யூடியூபர்' சாதிக்பாட்ஷா, 41, என்பவரை, போலீசார் கைது செய்தனர்.
துாத்துக்குடி மாவட்டம், கூட்டாம்புளியைச் சேர்ந்தவர் அற்புதராஜ், 20. இவர், சென்னையில் தன் உறவினர் திருமணத்துக்கு சென்றுவிட்டு, நேற்று முன்தினம் இரவு, அந்தியோதயா ரயிலில் ஊருக்கு திரும்பினார்.
நள்ளிரவு தன் மொபைல்போனை ரயிலில் சார்ஜ் போட்டு விட்டு, அற்புதராஜ் துாங்கி விட்டார். திருச்சி அருகே எழுந்து பார்த்தபோது, மொபைல்போன் காணாமல் போயிருந்தது.
அற்புதராஜ், திருச்சி ரயில்வே போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்தனர். அதில், திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியைச் சேர்ந்த யூடியூபர் சாதிக்பாட்ஷா என்பவர், மொபைல் போனை திருடியது தெரிந்தது. போலீசார் அவரை கைது செய்து, மொபைல்போனை பறிமுதல் செய்தனர்.