Religion
பெரியவடவாடியில் கும்பாபிேஷகம்
விருத்தாசலம்: பெரியவடவாடி மகா மாரியம்மன் கோவிலில் கும்பாபிேஷகம் விமர்சையாக நடந்தது.
விருத்தாசலம் அடுத்த பெரியவடவாடி கிராமத்தில் 500 ஆண்டுகள் பழமையான விநாயகர், பாலமுருகன், மகா மாரியம்மன், காத்தவராயன் கோவில் உள்ளது. இதனை புனரமைத்து நேற்று கும்பாபிேஷம் செய்யப்பட்டது.
அதனையொட்டி, கடந்த 14ம் தேதி காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ேஹாமம், நவக்கிரக ேஹாமம், தீபாராதனை நடந்தது. மாலை யாக பூஜை துவங்கியது.
முக்கிய நிகழ்வாக, நேற்று காலை நான்காம் கால யாகபூஜை, கோ பூஜை, பிம்பசுத்தி, நாடி சந்தானம், மகா தீபாராதனை நடந்தது. காலை 9:30 மணிக்கு கடம் புறப்பாடாகி, விருத்தகிரீஸ்வரர் கோவில் சிவாச்சாரியார் ரத்தினசபாபதி தலைமையிலான வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்கிட, கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிேஷகம் செய்து வைக்கப்பட்டது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.