நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!

நேபாள பெருவெள்ள மீட்புப் பணிகளில் இந்திய ராணுவம் முதன்மையாக உதவி வருகிறது என அந்நாட்டு எம்.பி. தெரிவித்தது குறித்து...
இந்தியாவிலிருந்து நேபாளத்துக்கு அனுப்பப்பட்ட நிவாரணப் பொருள்கள். - படம் - எக்ஸ்
நேபாள பெருவெள்ள மீட்புப் பணிகளில் இந்திய ராணுவம் முதன்மையாக உதவி வருகிறது என அந்நாட்டு எம்.பி. சாகர் தாகல் செவ்வாய்க்கிழமை (செப். 15) தெரிவித்தார்.
கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி, நேபாள-திபெத் எல்லைக்கு அருகே பனி மற்றும் பாறை சரிவால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு, நேபாளத்தின் வடக்கு மற்றும் மத்தியப் பகுதிகளில் உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களைச் சீரழித்தது. இதில் சுமார் 1,400 பேர் உயிரிழந்தனர்; 5,000-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை.
இந்தப் பேரிடரால் பாதிக்கப்பட்டோரை மீட்கும் பணிகளில் இந்திய ராணுவம் உள்ளிட்ட பல நாடுகளின் படைகள் ஈடுபட்டு வருகிறது.
இதுகுறித்து நேபாள எம்.பி. சாகர் தாகல் பேசியதாவது:
மீட்புப் பணிகளில் இந்திய ராணுவம் மிகவும் உதவியாக இருந்து வருகிறது. மலைப்பாங்கான நிலப்பரப்புகளில் செயல்படுவதற்கு மிகுந்த அனுபவமும், சிறந்த உபகரணங்களும் கொண்ட நேபாள ராணுவத்துடன் நாங்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறோம்.
அதேவேளையில், இந்திய ராணுவமும் எங்களுடன் இணைந்து முதன்மைப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. நாங்கள் அனைவரும் ஒரே குழுவாக இணைந்து செயல்படுகிறோம். புதிய தொழில்நுட்பங்களுடன் ஆக்கப்பூர்வமான சிந்தனைகளயும் இந்திய ராணுவம் கொண்டுள்ளது.
உதாரணமாக, சேற்றை நீரிலிருந்து பிரிக்க உதவும் ஒரு ரசாயனத்தை அவர்கள் அறிமுகப்படுத்தினர். இதனால் சேறுகளின் மீது மிகவும் பாதுகாப்பாக நடக்க முடிந்தது. அது மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.
இந்த நெருக்கடியான நேரத்தில் ஆதரவளித்து வரும் இந்திய அரசாங்கத்துக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நடவடிக்கையின் மூலம் பெற்ற அனுபவத்தைக் கொண்டு, எதிர்காலத்தில் தேவைப்படும் போதெல்லாம் இந்தியாவுக்கு எங்களால் ஆதரவளிக்க முடியும் என நம்புகிறோம் என்று தெரிவித்தார்.
Nepal MP Sagar Dhakal stated on Tuesday (Sept. 15) that the Indian Army is playing a primary role in the rescue operations following the massive floods in Nepal.
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
