நேபாளத்தை சீரமைக்க ரூ.45,410 கோடி தேவை

காத்மாண்டு: 'நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக சேதமடைந்த பகுதிகளை மறுசீரமைக்க 45,410 கோடி ரூபாய் செலவாகும்' என, நேபாள வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நம் அண்டை நாடான நேபாளம் மற்றும் திபெத் எல்லை பகுதியின் இமய மலை தொடரில் உள்ள பனிப்பாறைகடந்த மாதம் 26ம் தேதி திடீரென உடைந்து சரிந்து அருகில் இருந்த நதியில் விழுந்தது. இதனால், ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவால் 1,500 பேர் பலியாகினர்; 5,600க்கும் மேற்பட்டோர் மாயமாகினர்.
வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் சேதமடைந்த பகுதிகளை மறுசீரமைக்க குறைந்தபட்சம் 45,410 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.