Religion
விநாயக சதுர்த்தி முப்பெரும் விழா
ஓட்டேரி: ஓட்டேரி எஸ்.எஸ்.புரத்தில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் முப்பெரும் விழா நேற்று கொண்டாடப்பட்டது.
இதில், ‘வாழ்வாதார அடைக்காப்பகம்’ அமைப்பு சார்பில் வாழ்வாதாரத்தில் பின்தங்கிய 1,000 பெண்களுக்கு, இலவச புடவை, அன்னதானம் உள்ளிட்டவை நேற்று வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் வாழ்வாதார அடைக்காப்பாகத்தின் சார்பில் இரா.அர்ஜுனமூர்த்தி, எஸ்.எஸ்.புரம் பகுதி ஆதிதிராவிட வாலிப பொது சீர்திருத்த சங்க தலைவர் திவாகர், ‛மதர்ஸ் ஆப் அனிமல்ஸ்’ நிறுவனர் சிவா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் இரா.அர்ஜுனமூர்த்தி பேசியதாவது:
நல்ல எண்ணங்கள் நன்மையாக மாற வேண்டும். அந்த நன்மைகள் பலரது வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.
விநாயகரின் ஞானம் ஒழுக்கம், பணிவு, அன்பு மற்றும் பரிவு உள்ளிட்ட நற்பண்புகள், நம் வாழ்விலும் கடைப்பிடிப்பதே இந்த முயற்சியின் ஆழமான நோக்கமாகும்.
என் 40 ஆண்டுகால தொழில், சமூகநலன் மற்றும் வாழ்க்கை அனுபவத்தை, ஏழை, எளிய மக்களின் நலனுக்கும், இளைஞர்களின் முன்னேற்றத்திற்கும், தொடர்ந்து அர்ப்பணித்து வருகிறேன். இதற்காகவே, இந்த ‘வாழ்வாதார அடைக்காப்பகம்’ முயற்சித்து வருகிறது.
இப்பகுதி மக்களின் கல்வி வேலைவாய்ப்பு உள்ளிட்ட அடிப்படை தேவைகள் அமைய, என்னாலான முயற்சிகளை செய்வேன்.
இவ்வாறு அவர் பேசினார்.