எகிறிய தனியார் பேருந்து கட்டணம்; குமுறும் பயணிகள்

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் முன்னறிவிப்பின்றி தனியார் பேருந்துகளில் கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் இருந்து மொத்தம் 17 தனியார் பேருந்துகள் நாள் ஒன்றுக்கு இயக்கப்பட்டு வருகிறது. இதில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் வேலூரில் இருந்து குடியாத்தத்திற்கும் குடியாத்தத்தில் இருந்து வேலூருக்கும் சென்று வருகின்றனர். குடியாத்தம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து கூலி வேலைக்கு செல்பவர்கள், கல்லூரி மற்றும் அலுவலகத்திற்குச் செல்வார்கள் என பலரும் தனியார் பேருந்துகள் மூலமாக சென்று வருகின்றனர்.
இந்நிலையில் வேலூரிலிருந்து குடியாத்தத்திற்கு 26 ரூபாய் டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் திடீரென எந்தவித முன் அறிவிப்பும் இன்றி தற்பொழுது 4 ரூபாய் உயர்த்தப்பட்டு 30 ரூபாய் டிக்கெட் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. திடீர் கட்டண உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)