Politics
'குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுப்பது போல்...'- தவெகவை சாடிய எடப்பாடி பழனிசாமி

குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுப்பது போல் அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஆசை காட்டி அவர்களை திருடிக் கொண்டது தமிழக வெற்றிக் கழகம் என அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையான விமர்சனத்தை வைத்துள்ளார்.
திருச்சி மாவட்டம் கருமண்டபம் பகுதியில் அதிமுக மாவட்டச் செயலாளர் சிவகுமாரின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மேடையில் பேசும்போது இந்த விமர்சனத்தை வைத்துள்ளார். இதே விழாவில் கவிஞர் வைரமுத்துவும் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியின் மேடையில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ''புதிதாக ஆட்சி அமைத்துள்ள ஒரு அரசு நம்முடைய சட்டமன்ற உறுப்பினர்களை எப்படி சாலையில் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுத்து அள்ளிச் செல்வதை போல நமது சட்டமன்ற உறுப்பினர்களை அவர் பக்கம் இழுத்துக் கொண்டார்கள். இந்த தமிழக வெற்றிக் தழகத்தின் ஆட்சி நிலையானது அல்ல, அவர்கள் சொந்த காலில் நிற்கவில்லை இரவல் காலில் நின்று கொண்டிருக்கிறார்கள். இன்றைக்கு கூட்டணிக் கட்சி எம்எல்ஏக்கள் விலகிக் கொண்டால் அவர்களுடைய ஆட்சிக்கு கவிழ்ந்து விடும். தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் பெரும்பாலும் நிறைவேற்றப்படவே இல்லை. எல்லாம் ரீல்ஸ் ரீல் விட்டு காலத்தை கழிக்கிறார்கள். நெல்மணிகளை அரசு முறையாக கொள்முதல் செய்யாததால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது'' என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)