Politics
கேரள எதிர்க்கட்சித் தலைவர் பினராயி விஜயன் பதவி விலக வேண்டும்! - பாஜக வலியுறுத்தல்!

அமலாக்கத்துறை நடவடிக்கையைத் தொடர்ந்து கேரள எதிர்க்கட்சித் தலைவர் பினராயி விஜயன் பதவி விலக பாஜக வலியுறுத்தல்...
கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயன். - (கோப்புப் படம்)
சிஎம்ஆா்எல் ஊழல் வழக்கில், கேரள எதிர்க்கட்சித் தலைவர் பினராயி விஜயனுக்கு எதிரான அமலாக்கத்துறை நடவடிக்கையைத் தொடர்ந்து அவர் பதவி விலக வேண்டுமென கேரள பாஜக தலைவர் சந்திரசேகர் வலியுறுத்தியுள்ளார்.
கேரளத்தில், கொச்சின் மினரல்ஸ் ரூடைல் நிறுவனம் (சி.எம்.ஆா்.எல்.) எனும் நிறுவனத்தின் மூலம் ரூ. 2.78 கோடி மோசடி செய்ததாகக் கூறி முன்னாள் முதல்வர் பினராயி விஜயன், அவரது மகள் வீணா மற்றும் மருமகன் முகமது ரியாஸ் ஆகியோருக்கு எதிராக அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டு வந்தது.
இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கில் முக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகக் கூறி முதல் தகவல் அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு கேரள மாநில காவல்துறைக்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து கேரள சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பினராயி விஜயன் பதவி விலக வேண்டுமென பாஜக தலைவர் சந்திரசேகர் இன்று (செப். 9) வலியுறுத்தியுள்ளார்.
இதுபற்றி, அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில்,
“இன்று நான் பினராயி விஜயனிடம் பணிவுடன் கேட்டுக்கொள்வது என்னவென்றால், நீங்கள் கேரளத்தின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அரசியல் நோக்கங்களுடன் தன்மீது சுமத்தப்படுவதாகக் கூறி அவற்றை முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் தொடர்ந்து மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
Kerala BJP has demanded the resignation of Kerala LOP Pinarayi Vijayan following the ED action against him.
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.