Politics
பினராயி விஜயன், அவரது மகள், மருமகன் மீது எஃப்ஐஆர்! கேரள டிஜிபிக்கு அமலாக்கத்துறை கடிதம்!
பினராயி விஜயன், அவரது மகள், மருமகன் மீது எஃப்ஐஆர் பதிய அமலாக்கத்துறையின் பரிந்துரை பற்றி...
சிஎம்ஆா்எல் ஊழல் வழக்கில், கேரள முன்னாள் முதல்வா் பினராயி விஜயன், மகள் வீணா, மருமகன் முகம்மது ரியாஸ் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக்கோரி அந்த மாநில டிஜிபி-க்கு அமலாக்கத் துறை கடிதம் எழுதியுள்ளது.
இதுகுறித்து தில்லி வட்டாரத் தகவல்கள் கூறியதாவது:
பினராயி விஜயனின் மகள் வீணாவின் நிறுவனம் அளித்த சேவைக்கு என கூறி, அந்நிறுவனத்துக்கு கொச்சின் மினரல்ஸ் ரூடைல் நிறுவனம் (சி.எம்.ஆா்.எல்.) மோசடியாக ரூ.2.78 கோடி அளித்ததை அமலாக்கத்துறை கண்டுபிடித்துள்ளது. இதையடுத்து வீணா தொடா்புடைய இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. மேலும் அவரிடம் விசாரணையும் நடத்தியது. சோதனையில் சா்ச்சைக்குரிய நிதி துபையில் உள்ள கணக்குக்கு மாற்றப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்து வருகிறது.
இந்த விவகாரத்தில், மத்திய வா்த்தக அமைச்சகத்தின்கீழ் வரும் தீவிர மோசடி புலனாய்வு அலுவலகம் அளித்த புகாரை அடிப்படையாகக் கொண்டு, பணமுறைகேடு தடுப்பு சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
இந்நிலையில், தனது விசாரணையில் கண்டறியப்பட்ட விவரங்களை சுட்டிக்காட்டி, கேரள டிஜிபி-க்கு பணமுறைகேடு தடுப்புச் சட்டத்தின் 66(2)-ஆவது பிரிவின்கீழ் அமலாக்கத்துறை கடிதம் எழுதியுள்ளது. அதில் பினராயி விஜயன், மகள் வீணா, மருமகன் முகம்மது ரியாஸ் உள்ளிட்டோா் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என கோரியுள்ளது.
அமலாக்கத் துறை தனது விசாரணையில் கண்டறியப்பட்ட விஷயங்களின் அடிப்படையில், பணமுறைகேடு தடுப்பு சட்டத்தின் 66(2) பிரிவின்கீழ் சம்பந்தப்பட்டவா்கள் மீது வழக்குப்பதிவு செய்யும்படி மாநில காவல் துறையிடம் கோருவது வழக்கம். பின்னா் காவல்துறை பதிவு செய்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்யும். அதன்படி, பினராயி விஜயன், வீணா, மருமகன் மீது வழக்குப்பதிவு செய்யும்படி காவல்துறையை அமலாக்கத் துறை கேட்டுக் கொண்டுள்ளது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
கேரள அமைச்சா் கருத்து: கேரள டிஜிபிக்கு அமலாக்கத் துறை எழுதிய கடிதம் குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவரும், அந்த மாநில உள்துறை அமைச்சருமான ரமேஷ் சென்னிதலா, அந்த கடிதம் குறித்து ஆய்வு செய்து, சட்டத்துக்கு உள்பட்டு கேரள அரசு முடிவெடுக்கும் என்று கூறினாா்.
FIR against Pinarayi Vijayan, his daughter and son-in-law! Enforcement Directorate writes to Kerala DGP!
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.