Arts, culture, entertainment and media
“உங்கள் குரலில் நான் மேடையில் பேச ஆரம்பிக்கும்போதெல்லாம்...” - சிவகார்த்திகேயன் உருக்கம்!

பட்டிமன்ற நடுவரும், தமிழ் பேராசிரியரும், தமிழறிஞருமான சாலமன் பாப்பையா (வயது 90) வயது மூப்பால் ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக மதுரையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (11.09.2026) காலமானார்.
‘அன்புப் பெரியோர்களே.. அருமைத் தாய்மார்களே.. இனிய குழந்தைகளே..’ என்ற சொற்றொடருக்கு சொந்தக்காரரான இவர், தமிழ் இலக்கியத்திற்கும் பட்டிமன்றக் கலைக்கும் ஆற்றிய தொண்டால் தமிழக மக்களிடம் நீங்கா இடம் பிடித்துள்ளார். இவரது உடல் மதுரை ஆரப்பாளையம் ஞானஒளிவுபுரத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நாளை இறுதிச்சடங்கு முடிந்த பிறகு, தத்தனேரி மின் மயானத்தில் உடல் தகனம் செய்யப்படவுள்ளது.
இவரது மறைவு தமிழ் சமூகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையொட்டி அரசியல் தலைவர்கள், இலக்கியவாதிகள், பட்டிமன்ற பேச்சாளர்கள், திரைபிரபலங்கள் எனப் பலரும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன், “சிறு வயது முதல் உங்கள் குரல் இல்லாத பண்டிகை நாட்கள் இல்லை. என் கல்லூரி காலங்களில் உங்கள் குரல் இல்லாமல் நான் மேடை ஏறியதில்லை.
‘அன்பு பெரியோர்களே’ என்று உங்கள் குரலில் நான் மேடையில் பேச ஆரம்பிக்கும்போதெல்லாம் ஆர்ப்பரித்த இந்தத் தமிழ் சமூகத்தில், உங்கள் பேச்சாலும் தமிழாலும் நீங்கள் என்றும் எங்கள் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டே இருப்பீர்கள், ஐயா. உங்களின் பலகோடி ரசிகர்களில் ஒருவனாக எனது புகழஞ்சலி” என தனது எக்ஸ் பக்கம் வாயிலாக இரங்கல் தெரிவித்துள்ளார். சிவகார்த்திகேயன் மிமிக்கிரி செய்த காலத்தில் பெரும்பாலும் சாலமன் பாப்பையாவின் குரலோடுதான் தனது பெர்ஃபாமன்ஸை ஆரம்பிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறு வயது முதல் உங்கள் குரல் இல்லாத பண்டிகை நாட்கள் இல்லை.
என் கல்லூரி காலங்களில் உங்கள் குரல் இல்லாமல் நான் மேடை ஏறியதில்லை.
“அன்பு பெரியோர்களே” என்று உங்கள் குரலில் நான் மேடையில் பேச ஆரம்பிக்கும்போதெல்லாம் ஆர்ப்பரித்த இந்தத் தமிழ் சமூகத்தில், உங்கள் பேச்சாலும் தமிழாலும்… pic.twitter.com/D6KURThmM8
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)