Politics
மெக்கா தாக்குதல் முயற்சி! ஒப்பந்தக் கடமையை நிறைவேற்ற தயார்! - பாகிஸ்தான் அறிவிப்பு

இஸ்லாமியர்களின் புனித நகரமான மெக்கா மீதான தாக்குதல் முயற்சி குறித்து பாகிஸ்தான் அரசு கருத்து...
பாகிஸ்தான் பாதுகாப்புப் அமைச்சர் க்வாஜா ஆசிஃப் - AP
இஸ்லாமியர்களின் புனித நகரமான மெக்கா மீதான ட்ரோன் தாக்குதல் முயற்சிகளைத் தொடர்ந்து, சௌதி அரேபியா மற்றும் துருக்கி உடன் கையெழுத்திட்ட பாதுகாப்பு ஒப்பந்தக் கடமையை நிறைவேற்ற தயார் என பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
சௌதி அரேபியாவில் உள்ள இஸ்லாமியர்களின் புனித நகரமான மெக்கா மீது நேற்று (செப். 16) தாக்குதல் நடத்த ஏவப்பட்ட ட்ரோன்களை இடைமறித்து தகர்த்ததாகவும், இதற்கு யேமனின் ஹௌதி கிளர்ச்சிப்படைதான் காரணம் எனவும் சௌதி பாதுகாப்புப் படை குற்றஞ்சாட்டியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு ஹௌதி படை மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், மோதல்கள் பரவுவதைத் தடுப்பதற்கும், மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தக் கடமைகளை நிறைவேற்றுவதற்கும் பாகிஸ்தான் அரசு தயார்நிலையில் இருப்பதாக, பாகிஸ்தானிய பாதுகாப்பு அமைச்சர் க்வாஜா ஆசிஃப் இன்று கூறியுள்ளார்.
இதுபற்றி, செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது:
“ஒருவேளை மெக்கா மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அதைப் பாதுகாப்பதற்கு எந்தவொரு ஒப்பந்தமும் தேவையில்லை. மெக்கா ஒப்பந்தம் எங்களுக்கும் பொருந்தும் அந்தக் கடமையை நாங்கள் நிறைவேற்றுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஈரான் மீதான போரில், அமெரிக்காவுக்கு ஆதரவாகச் செயல்படும் சௌதி அரேபியாவுக்கு எதிராக ஹௌதி படை நடவடிக்கைகள் மேற்கொண்டு யேமனின் முக்கிய தளங்களைக் கைப்பற்றி வருகிறது.
இத்துடன், கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி சௌதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து முத்தரப்புப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இதன்படி, ஒரு நாட்டின் மீதான தாக்குதல் மூன்று நாடுகளின் மீதான தாக்குதலாகக் கருதப்படும் என்பதால் ஹௌதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை மேற்கொள்ள வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.
the Pakistani government has stated that it is ready to fulfill its obligations under the security agreements signed with Saudi Arabia and Turkey.
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.