Crime, law and justice
டாஸ்மாக் விற்பனையாளரை தாக்கிய 2 பேர் மீது வழக்கு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் டாஸ்மாக் கடை விற்பனையாளரைத் தாக்கிய 2 மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த தென்கீரனுாரைச் சேர்ந்தவர் அருள், 52; கள்ளக்குறிச்சி - தியாகதுருகம் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணிபுரிகிறார்.
நேற்று முன்தினம் மதுபாட்டில் வாங்க வந்த நபர் கடையின் 'கேட்'டை கையால் குத்தி, ஒருமையில் பேசினார்.
இதனைத் தட்டிக்கேட்ட அருளை அந்த நபர் தன்னுடன் வந்த நபருடன் சேர்ந்து தாக்கினார். இதில் காயமடைந்த அருள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் நடத்திய விசாரணையில், அருளை தாக்கியது கருணாபுரத்தைச் சேர்ந்த சஞ்சய், சாரதி என தெரியவந்தது. அதன் பேரில் இருவர் மீதும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.