Religion
விநாயகர் சிலைகளை கரைக்க கடற்கரையில் குவிந்த மக்கள்
திருவொற்றியூர், செப். 15- வீடுகளில் வைத்து வழிபட்ட களிமண் விநாயகர் சிலைகளை கடலில் கரைக்க, ஆயிரக்கணக்கான

வீடுகளில் வைத்து வழிபட்ட களிமண் விநாயகர் சிலைகளை கடலில் கரைக்க, ஆயிரக்கணக்கான மக்கள் கடற்கரைகளில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நாடு முழுவதும் நேற்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னையில் மக்கள் வீடுகளில் களிமண் விநாயகர் சிலைகளை வைத்து, சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். வழிபட்ட விநாயகர் சிலைகளை மாலையில் நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம்.
அதன்படி, காசிமேடு, திருவொற்றியூர் மற்றும் எண்ணுார் பகுதிகளைச் சேர்ந்த மக்கள், கடற்கரைகளில் விநாயகர் சிலைகளை கரைக்க குடும்பத்துடன் திரண்டனர். எண்ணுாரில் தாழங்குப்பம், சின்னகுப்பம், பாரதியார் நகர், திருவொற்றியூரில் கே.வி.கே.குப்பம், திருவொற்றியூர் குப்பம், ஒண்டிக்குப்பம், திருச்சிணாங்குப்பம், நல்லதண்ணீர் ஓடை குப்பம், காசிமேட்டில் செரியன் நகர், அண்ணா நகர் மற்றும் காசிமேடு மீன்பிடி துறைமுகம் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
கடற்கரைகளில் விநாயகர் சிலைகளை வைத்து, கற்பூரம் ஏற்றி வழிபட்டு, வேண்டுதல்களை நிறைவேற்றிய பின் சிலைகளை கடலில் கரைத்து விட்டு சென்றனர். இதனால் கடற்கரை ஒட்டிய பல்வேறு பகுதிகளில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.