மேலாண்மை குழு கூட்டம்
பவானி:மேட்டூர் மேற்குகரை கால்வாய் நீரை பயன்படுத்துவோர் சங்கத்தின், மேலாண்மை குழு கூட்டம், பவானி ஜீவா நகர், வேங்கைமரத்தையன் கோவில் வளாகத்தில் நடந்தது.
1 டன் கரும்புக்கு 4,000 ரூபாய் உயர்த்தி வழங்கியதற்கு தமிழக
அரசுக்கு நன்றி தெரிவித்தும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கும்
வகையில், முழு கடன் தள்ளுபடி செய்யாமல் போனாலும், விவசாயிகளின்
கருத்துகளை ஏற்று, கடன் தள்ளுபடி அறிவித்த, முதல்வருக்கும்,
வேளாண்துறை அமைச்சருக்கும் நன்றி தெரிவித்து தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டன.