காஞ்சிபுரம் மாவட்டம் இனிதாக
கண்ணன் அவதார விழா * சொற்பொழிவு, தலைப்பு, பிரகலாத சரித்திரம், சொற்பொழிவாளர்: அகரம் சேஷாத்திரி சுவாமி, யதுகுல வேணுகோபால பஜனை கோவில், பாண்டவ பெருமாள் கோவில் வடக்கு மாட வீதி, காஞ்சிபுரம், மாலை 6:00 மணி; ராமர் அலங்காரத்தில், வேணுகோபாலர் அனுமந்த வாகனத்தில் வீதியுலா, இரவு 7:00 மணி.
சொற்பொழிவு * தலைப்பு: ராமா என் பாரத்தை உன் மேல் வைக்கிறேன் என்று கருதாதே. அரசன் நெறியை அறநெறியில் செலுத்து -- தசரதன், சொற்பொழிவாளர்: கல்லுாரி முதல்வர் வெங்கடேசன், ஏற்பாடு: தமிழ்துறை, காஞ்சி கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி கீழம்பி, காஞ்சிபுரம். காலை 11:00 மணி.
திருப்பள்ளியெழுச்சி * பெருஞ்சோதி தரிசனம், திருபுண்ணியநாகேச்சுரர் கோவில், பள்ளிக்கூட தெரு, மதுரா மோட்டூர், சின்னய்யன்குளம், ஓரிக்கை, காஞ்சிபுரம், காலை 5:30 மணி; அன்னதானம், மதியம் 1:00 மணி.
சிறப்பு வழிபாடு * ஆயில்யம் நட்சத்திரம், சிறப்பு அபிஷேகம், நட்சத்திர விருட்ச விநாயகர் கோவில், உக்கம்பெரும்பாக்கம், காலை 7:30 மணி.
திருக்குறள் பயிற்சி வகுப்பு * பள்ளி மாணவ- - மாணவியருக்கான இலவச திருக்குறள் பயிற்சி வகுப்பு, பயிற்சியாளர்கள்:புலவர் பரமானந்தம், குறள் அமிழ்தன், குறள் கவுசல்யா, குறள் நாகராஜன், ஏற்பாடு: உலகப்பொதுமறை திருக்குறள் பேரவை, கச்சபேஸ்வரர் கோவில், காஞ்சிபுரம், காலை 6:30 - 7:30 மணி வரை; மாலை 5:30 - 6:45 மணி வரை.
அன்னதானம் * அன்னதான சேவை திட்டத்தின் கீழ் 365 நாட்கள் அன்னதானம், ஏற்பாடு: காஞ்சிபுரம் கிரான்ட் ரோட்டரி சங்கம், ஐராவதீஸ்வரர் கோவில், ராஜ வீதி, காஞ்சிபுரம், பிற்பகல் 12:00 மணி.
* ராமலிங்க அடிகள் அருள் நிலையம், காமாட்சியம்மன் சன்னிதி தெரு, காஞ்சிபுரம், உபயம்: வரலாற்று நகர அரிமா சங்கம், பல்லவன் நகரம், தொன்மை நகரம், மற்றும் அண்ணா அரிமா சங்கம், பிற்பகல் 12:00 மணி.