Arts, culture, entertainment and media
ஓய்வூதியர்களுக்கு காசில்லா மருத்துவம் அமல்படுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், தமிழ்நாடு அரசு அனைத்துதுறை ஓய்வூதியர் சங்கம்
புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், தமிழ்நாடு அரசு அனைத்துதுறை ஓய்வூதியர்
சங்கம் சார்பில், காசில்லா மருத்துவம் ஓய்வூதியர்களுக்கு
அமல்படுத்தக்கோரி, நேற்று காலை, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் துரை தலைமை வகித்தார். துணைத்தலைவர் சரவணபவன்
வரவேற்றார்.
செயலாளர் முருகன், தமிழ்நாடு அனைத்து ஓய்வூதியர்
சங்கங்களின் கூட்டமைப்பு குணசேகரன் ஆகியோர் பேசினர். இணை செயலாளர்
ரங்கநாதன் நன்றி கூறினார்.
மருத்துவம் வழங்க வேண்டும். மருத்துவ காப்பீடு திட்ட குறைபாடுகளை
நீக்க வேண்டும். மருத்துவ காப்பீடு அடையாள அட்டையை உடனே வழங்க
வேண்டும்.
முழு மருத்துவ செலவையும் காப்பீட்டு நிறுவனமே ஏற்க
வேண்டும். அவசர சிகிச்சை பெற அங்கீகரிக்காத மருத்துவமனை,
பட்டியலிடப்படாத வியாதிகளுக்கு செலவு தொகை காலதாமதமின்றி
முழுமையாக உடனே வழங்க வேண்டும். மருத்துவமனைகளில் முன்பணம் செலுத்த
ஓய்வூதியர்களை நிர்ப்பந்திக்கக்கூடாது. ஓய்வூதியர்களை
அலைக்கழிக்காமல், வஞ்சிக்காமல், உயர்த்தப்பட்ட சந்தா தொகையை ரத்து
செய்ய வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கண்டன
கோஷங்களை எழுப்பினர்.