Politics
"பேசக் கூடாது... கேட்கக் கூடாது" - தலைவர்களின் துறவற அரசியல்

எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க உறுதிமொழி எடுக்க வேண்டும். `எதற்காகக் கட்சி ஆரம்பித்தீர்கள்?’ என்று கேட்கத் தடை.
தமிழக அரசியலில் என்ன நிகழ்வு நடந்தாலும், உடனடியாக எதிர்வினையாற்றும் மருத்துவர் ராமதாஸ் அரசியல் துறவறம் மேற்கொள்வதாகச் சமீபத்தில் அறிவித்தார். அதோடு, தன்னைச் சந்திக்க வருபவர்கள், ‘அரசியல் பேச வேண்டாம்' என்ற நிபந்தனையுடன் தைலாபுரம் தோட்டத்துக்கு முன்னால் அவர் சார்பில் வைக்கப்பட்ட பேனர் சமூக வலைதளங்களில் டிரெண்டானது. ‘அரசியலே பேசக் கூடாது என்றால், பிறகு எதற்குப் பார்வையாளர் நேரம்?' என நெட்டிசன்களும் வறுத்தெடுத்தனர். இந்த நிலையில், `அவரைப்போல சில அரசியல் தலைவர்கள் துறவறம் மேற்கொண்டால் எந்த விஷயத்தைத் துறப்பார்கள்... என்ன நிபந்தனை விதிப்பார்கள்?’ எனக் கற்பனைக் குதிரையை ஓடவிட்டோம்.
விஜய் எதிர்க்கட்சிகள் கேட்கிற கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிப்பதிலிருந்து துறவறம். நிபந்தனை: ஆட்சியின் சட்டம்- ஒழுங்கு குறித்து பேசக் கூடாது.
கனிமொழி தீவிரமான பா.ஜ.க எதிர்ப்பு அரசியலிலிருந்து துறவறம். நிபந்தனை: மருமகன் உதயநிதி பெண்கள் குறித்துப் பேசியது பற்றி மட்டும் கேள்விக் கேட்கத் தடை.
எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதிலிருந்து துறவறம். நிபந்தனை: சசிகலா, டி.டி.வி-யைக் கட்சியில் மீண்டும் இணைக்க வேண்டும் என்று வற்புறுத்தக் கூடாது. தேர்தலில் சீட்டுக்குக் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்கக் கூடாது.
சீமான் அடிக்கடி பத்திரிகையாளர்களைச் சந்திப்பதிலிருந்து துறவறம். `முதல்வர் விஜய் நேர்காணல் கொடுத்தால், அதற்கு அடுத்த நாளே நானும் கொடுப்பேன்’ என அடம். நிபந்தனை: தேர்தல் வெற்றி, தோல்வி குறித்து எக்காரணத்தைக்கொண்டும் பேசக் கூடாது.
நயினார் நாகேந்திரன் தமிழ்நாட்டில் பா.ஜ.க-வை வளர்ப்பதிலிருந்து துறவறம். நிபந்தனை: அண்ணாமலையின் அமைப்பு பற்றிப் பேசி வெறுப்பேற்றத் தடை.
டி.டி.வி.தினகரன் அரசியலில் சித்தி, மாமா போன்ற நெருங்கிய உறவுகளிடமிருந்து துறவறம். நிபந்தனை: எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க உறுதிமொழி எடுக்க வேண்டும். `எதற்காகக் கட்சி ஆரம்பித்தீர்கள்?’ என்று கேட்கத் தடை.
திருமாவளவன் `இது கொள்கைக் கூட்டணி’ என்கிற வார்த்தையிலிருந்து துறவறம். நிபந்தனை: ஆளூர் ஷாநவாஸ் பற்றிக் கேள்வி கேட்கக் கூடாது.
`விஜய்தான் பிரதமர் வேட்பாளர்’ எனப் பேசும்
த.வெ.க அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் பேசுவதைக் கண்டுகொள்ளாத துறவறம்.
த.வெ.க-வினர் ஏற்றுக்கொண்டார்களா என்பது குறித்து மட்டும் கண்டிப்பாகக் கேட்கக் கூடாது.
அடிக்கடி கூட்டணி மாறுவதிலிருந்து துறவறம்.
நிபந்தனை: சிறந்த எம்.எல்.ஏ பிரேமலதா, மிகச்சிறந்த
எம்.பி சுதீஷ் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். சாட்ஜிபிடி-யில் அப்படி இல்லையே என்று சொல்லக் கூடாது.
