Education
ரூ 58,500 சம்பளத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி..?

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் பதிவறை எழுத்தர் வேலைக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக...
பெரம்பலூர், சிவகங்கை, திருவாரூர், ராமநாதபுரம், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் காலியாக உள்ள பதிவறை எழுத்தர் பணியிடத்திற்கு தகுதியானவர்களிடமிருந்து செப்.30 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆதி திராவிடர் (எஸ்சி) பிரிவைச் சேர்ந்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து பார்ப்போம்...
பதவி: பதிவறை எழுத்தர் (Record Clerk)
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 1.7.2026 தேதியின்படி, ஆதி திராவிடர் (எஸ்சி) 18 முதல் 37 வயதிற்குள் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பிலிருந்து 10 ஆண்டுகள் சலுகைகள் வழங்கப்படும். முன்னாள் ராணுவத்தினர் 18 முதல் 55 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேருவதற்காகன கடைசி நாள்:
மாவட்ட வாரியாக பெரம்பலூர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள்: 30.9.2026
அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பப் படிவம் பெறுவதற்கு அந்தந்த மாவட்டத்தின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை: ஆர்வமும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதனை தெளிவார பூர்த்தி செய்து, அதனுடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள கல்வித்தகுதி, இருப்பிடம், சாதிச்சான்றிதழ் நகல்களை இணைத்து அந்தந்த மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலக முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பப்பட வேண்டும்.
தகுதியான நபர்களுக்கு மட்டுமே நேர்முகத் தேர்விற்கான அழைப்பு விடுக்கப்படும்.
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் தகுதியில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
காலதாமதமாக வரும் விண்ணப்பங்கள் எந்த காரணம் கொண்டும் பரிசீலிக்கப்படமாட்டாது.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முக தேர்வு நடைபெறும் இடம், நாள் மற்றும் நேரம் குறித்த விபரங்கள் நேர்முகத் தேர்வு கடிதம் மூலம் தனியே அனுப்பி வைக்கப்படும்.
மாவட்டம், அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் பெறுவதற்கு கீழ்வரும் மாவட்ட இணையதள முகவரிக்கு சென்று தெரிந்துகொள்ளவும்.
பெரம்பலூர்: https://perambalur.nic.in/notice_category/recruitment/
சிவகங்கை: https://sivaganga.nic.in/notice_category/recruitment/
திருவாரூர்: https://tiruvarur.nic.in/notice_category/recruitment/
நீலகிரி: https://nilgiris.nic.in/notice_category/recruitment/
ராமநாதபுரம்: https://ramanathapuram.nic.in/notice_category/recruitment/
Notification for Recruitment to the Post of Record Clerk...
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.