Lifestyle and human interest
மின்வெட்டால் மக்கள் அவதி

அரூர்; தர்மபுரி மாவட்டம், அரூரில் கச்சேரிமேடு, திரு.வி.க., நகர், கோவிந்தசாமி நகர், நான்கு ரோடு, முருகர் கோவில் தெரு, அம்பேத்கர் நகர் உள்ளிட்ட பகுதிகளில், நேற்று முன்தினம் இரவு முதல், நேற்று காலை வரை அடிக்கடி மின்தடை
ஏற்பட்டது.
பல மணி நேரமாகியும் மின்சாரம் வராததால் மக்கள் அவதிக்குள்ளாகினர். முதியோரும், குழந்-தைகளும் புழுக்கம் தாங்க முடியாமலும், கொசுக்-கடியாலும் துாங்க முடியாமல் சிரமத்திற்குள்ளா-கினர். அதே போல், அரூர் சுற்று வட்டார கிரா-மங்களிலும் மின்தடை ஏற்பட்டதால் விவசா-யிகள் அவதிக்குள்ளாகினர்.
ஏற்கனவே கடும் வறட்சி மற்றும் போதிய மழை-யின்மை காரணமாக விவசாயம் பாதிக்கப்ட்டுள்-ளது. இந்நிலையில், தற்போது அறிவிக்கப்படாத மின்வெட்டு காரணமாக, ஆழ்துளை மற்றும் கிணற்று பாசனம் மூலம் விவசாயம் செய்து வரும் விவசாயிகள், தாங்கள் சாகுபடி செய்துள்ள பயிர்களுக்கு, தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே முறையாக மின்சாரம் வழங்க, மின்வாரியத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.