Religion
காட்டுவனஞ்சூர் ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிேஷக விழா

சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த காட்டுவனஞ்சூரில் ஸ்ரீ சீத்தாலஷ்மீ சமேத ராமசந்திரமுர்த்தி மற்றும் பக்த ஆஞ்சநேயர் சுவாமி கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிேஷக விழா நேற்று நடந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த காட்டுவனஞ்சூர் கிராமத்தில் சீத்தாலஷ்மி சமேத ராமசந்ரமுர்த்தி மற்றும் பக்த ஆஞ்சநேயர் கோவில் புணருத்தாரணம் செய்யப்பட்டு நேற்று கும்பாபிேஷக விழா நடந்தது.
இதையொட்டி நேற்று முன் தினம் யாகசாலை வேள்வி பூஜைகள் நடந்தது. திருக்கோவிலுார் நாராயண பட்டாச்சாரியார் குழுவிணரால் வினாயகர், நாகராஜர் கரிக்கோல ஊர்வலம் நடந்தது.
பின் யந்திர பிரதிஸ்டை, பிம்ப ஸ்தாபணம்,அஷ்டபந்தனம் சாத்துதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை மகாசாந்தி ஹோமம்,கலச ஸ்தாபணம்,வாஸ்து பூஜைகள், கும்ப ஆராதனை, பூர்ணாகுதி நடந்தது. பின் கடம் புறப்பாடு நிகழ்ச்சியும் தொடர்ந்து கோவில் கலசங்களில் கும்பாபிேஷகம் நடந்தது.
ஆயிரகணக்கான பொது மக்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா வெங்கடேச பாகவதர் செய்திருந்தார்.சங்கராபுரம் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் தலைமையில் பாது காப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.



