Politics
Bus Crowd | விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை.. கிளாம்பாக்கத்தில் அலைமோதிய கூட்டம்.!

தொடர் விடுமுறைக்கு சொந்த ஊர் செல்லும் மக்கள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், தாம்பரம் ரயில் நிலையம் மற்றும் திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் குவிந்தனர்.
தொடர் விடுமுறையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு கிளம்பியவர்களால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திக்குமுக்காடியது.
சனி, ஞாயிறு, திங்கள் விநாயகர் சதுர்த்தி என தொடர் விடுமுறையை கொண்டாட மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்தனர். சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மக்கள் திரண்டதால் காணும் இடமெல்லாம் மனிதத் தலைகளாக காட்சி அளித்தன.
அதேபோல், தாம்பரம் ரயில் நிலையத்தில் குவிந்த பயணிகள் ரயில்களில் இடம் பிடிக்க முண்டியடித்தனர். கூட்ட நெரிசலில் சிக்கி பெண் மயக்கமடைந்ததால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அணிவகுத்த வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அரியலூர், பெரம்பலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சொந்த ஊர் செல்ல திரண்ட மக்களால் கூட்டம் அலை மோதியது.
