Religion
மதுரை வீரன் கோவில் கும்பாபிஷேகம்
குள்ளஞ்சாவடி, செப்.18- குள்ளஞ்சாவடி அடுத்த சிவனந்திபுரத்தில் உள்ள மதுரை வீரன், பொம்மி அம்மன், வெள்ளையம்மாள்
குள்ளஞ்சாவடி அடுத்த சிவனந்திபுரத்தில் உள்ள மதுரை வீரன், பொம்மி அம்மன், வெள்ளையம்மாள் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.
இதற்கான பூஜை நேற்று முன்தினம் மாலை அனுக்ஞை பூஜையுடன் துவங்கி, கணபதி ஹோமம், முளைப்பாரி ஊர்வலம், முதல் கால யாகசாலை, ஹோமம் மகாபூர்ணாஹுதி, தீபாராதனை நடந்தது. நேற்று காலை இரண்டாம் கால யாகசாலை, ஹோமம், நாடி சந்தானம், தச தரிசனம், யாத்ரா தானம், மகா பூர்ணாஹூதியை தொடர்ந்து, கடம் புறப்பாடாகி, காலை 10:10 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. மண்டல பூஜை இன்று தொடங்குகிறது.