Arts, culture, entertainment and media
“பட்டிமன்றத்தை பாமரர்களிடம் கொண்டு சேர்த்த ஆளுமை சாலமன் பாப்பையா” - ரஜினிகாந்த் இரங்கல்!
முனைவர், தமிழ் பேராசிரியர், பட்டிமன்ற நடுவரான சாலமன் பாப்பையா மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

“பட்டிமன்றத்தைப் பாமரர்களிடம் கொண்டு சேர்த்த ஆளுமை” எனத் தமிழறிஞரும், பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட இரங்கல் குறிப்பில், “படித்தவரிடையே இலக்கியத் தரத்தில் இருந்த பட்டிமன்றத்தைப் பாமரர்களிடமும் ஜனரஞ்சகமாகக் கொண்டு சென்ற மாபெரும் தமிழ் ஆளுமை பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
படித்தவரிடையே இலக்கியத் தரத்தில் இருந்த பட்டிமன்றத்தை பாமரர்களிடமும் ஜனரஞ்சகமாகக் கொண்டு சென்ற மாபெரும் தமிழ் ஆளுமை பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.#SolomonPappaiah
தமிழறிஞரும், பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா இன்று காலமானார். அவருக்கு வயது 90. மதுரை ஆரப்பாளையம் பகுதியில் உள்ள ஞானஒளிவுபுரம் பகுதியில் உள்ள இல்லத்தில் சாலமன் பாப்பையா உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நாளை மதியம் அவரது உடல் மதுரை தத்தனேரி மின் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளதாக உறவினர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஜோதிகாவின் 20ம் ஆண்டு திருமண உடையில் இவ்வளவு காதல் குறியீடுகளா? வெளியான சுவாரஸ்ய தகவல்கள்!
20ம் ஆண்டு திருமண உறவை கொண்டாடும் விதமாக, சூர்யா - ஜோதிகா மீண்டும் திருமணம்!
இதில் காதலை உணர்த்தும் வகையில் ஜோதிகாவின் உடையில் பல குறியீடுகள் இருந்துள்ளன.
சுவாரஸ்யமான அந்த டீடெய்ல்ஸை இங்கே தெரிஞ்சுக்கோங்க!
