Politics
விநாயகர் சிலைகளுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தணும்

இந்தியாவில், தமிழகத்தில் மட்டும் தான், புதிய இடங்களில் விநாயகர் சிலை அமைத்து வழிபட, காவல்துறை அனுமதி மறுக்கிறது. தி.மு.க., - அ.தி.மு.க., ஆட்சிகளில் போலவே, த.வெ.க., ஆட்சியிலும், அதே அணுகுமுறையை காவல்துறை கடைப் பிடிக்கிறது.
முதல்வர் விஜய், 'அனைத்து தரப்பு மக்களுக்குமான ஆட்சி' என கூறுகிறார். முஸ்லிம், கிறிஸ்துவர்கள் மத வழிபாட்டு நிகழ்ச்சிகளுக்கு, நெருக்கடி, அனுமதி மறுப்பு இல்லை. ஆனால், விநாயகர் சதுர்த்திக்கு மட்டும், விநாயகர் சிலைகள் அமைத்து வழிபட, காவல்துறை அனுமதி மறுக்கிறது.
பிற மாநிலங்களில், மிகப்பெரிய விநாயகர் சிலைகளை வைத்து வழிபடும்போது, தமிழகத்தில் மட்டும் கட்டுப்பாடுகள் விதித்திருப்பதை, ரத்து செய்ய வேண்டும். புதிதாக விநாயகர் சிலைகள் அமைத்து வழிபட, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். விநாயகர் சதுர்த்தி விழாவில், அமைச்சர்கள் பங்கேற்க வேண்டும்.

