Politics
கூட்டத்தொடரின் கடைசி நாள்; புயலை கிளப்பும் கவன ஈர்ப்பு தீர்மானம்!

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 1 மாத காலமாக நடைபெற்று வந்த நிலையில், இன்றுடன் (08-09-26) கூட்டத்தொடர் நிறைவடையவுள்ளது. இந்த நாளில் போக்குவரத்து, பொதுத்துறை, மாநில சட்டமன்றம், திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை ஆகிய துறைகளின் மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெறுகிறது.
அதற்கு முன்னதாக, தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்ட மசோதா, கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்கள் குறித்து விசாரணை அறிக்கை, சிஏஜி அறிக்கை, இந்திய தணிக்கைத்துறை அறிக்கைகள் ஆகிய அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெறவுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)