ஹைக்கூ கவிஞர்களின் சங்கமம்: தேடுங்கள்! சரியான ஹைக்கூவைக் கண்டடைவீர்கள் !

2026, ஆகஸ்ட் 2, ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணியிலிருந்தே சென்னை கோட்டூர்புரத்திலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தை நோக்கி, ஹைக்கூ கவிஞர்கள் பல ஊர்களிலிருந்தும் வரத்தொடங்கினர்.
இராசபாளையம், புதுக்கோட்டை, மதுரை, சேலம், திருச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், உத்திரமேரூர், காஞ்சிபுரம், விழுப்புரம் என இன்னும் பல ஊர்களைச் சேர்ந்த கவிஞர்களும் உற்சாகத்தோடு வந்துசேர்ந்தனர்.
சென்னையில் கடந்த 2025 ஜூன் 7-ஆம் தேதியன்று தொடங்கப்பட்டு, கடந்த 13 மாதங்களாகத் தொடர்ந்து ஹைக்கூ தொடர்பான நிகழ்வுகளை நடத்திவரும் "ஹைக்கூ முற்றம்' அமைப்பின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் பங்கேற்க, கவிஞர்கள் ஆர்வத்தோடு அன்றைக்கு வருகைதந்தனர்.
அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் எட்டாவது தளம், அன்று மட்டும் ஹைக்கூ கவிஞர்களுக்கு எட்டும் தளமானது. ஹைக்கூ கவிஞர்கள் நிறைந்த அரங்கில் தொடங்கிய விழாவிற்கு "ஹைக்கூ முற்றம்' அமைப்பாளர் கவிஞர் ஆழ்வார்குறிச்சி ப.சொக்கலிங்கம் தலைமையேற்றார். "பெரிய முன்திட்டமிடல் ஏதுமின்றி, வெகுஇயல்பாகத் தொடங்கிய ஹைக்கூ முற்றம், இன்றைக்கு இருநூறுக்கும் மேற்பட்ட ஹைக்கூ கவிஞர்கள் நிரம்பிய அரங்கில் இரண்டாம் ஆண்டுத் தொடக்க விழா காண்கிறது. ஹைக்கூ என்றாலே இயல்பானதுதானே..!' என்று தனக்கேயுரித்தான கனிந்த குரலில் தலைமையுரையாற்றினார்.
கவிஞரும், "ஹைக்கூ முற்றம்' மின்னிதழின் ஆசிரியருமான சா.கா.பாரதிராஜா அனைவரையும் அன்புதோய்ந்த வார்த்தைகளால் வரவேற்றார். "ஹைக்கூ முற்றம் - கடந்து வந்த பாதை' எனும் தலைப்பில் கவிஞர் வ.ரகுநாத், "ஹைக்கூ முற்றம் - மின்னிதழ் ஒரு பார்வை' எனும் தலைப்பில் கவிஞர் கா.பாபு சசிதரனும் ஹைக்கூ கவிதையைப் போலவே மிகச்சுருக்கமாகவும், அதேநேரத்தில் அழுத்தமானதுமான தங்கள் உரைகளை வழங்கினர்.
"ஹைக்கூ முற்றம்' இதழினை முனைவர் கி.ரா.சிதம்பர குமாரசாமி வெளியிட, இயக்குநர் சுப்ரமணியபாரதி பெற்றுக்கொண்டார். 33 ஹைக்கூ கவிஞர்கள் பங்கேற்ற "முற்றத்தில் உறங்கும் முழு நிலா' எனும் ஹைக்கூ கூட்டுத்தொகுப்பு நூலை இயக்குநர் என்.லிங்குசாமி வெளியிட, கவிஞர் கவிமுகில் பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வை கவிஞர் புதுகை ஆதீரா ஒருங்கிணைத்து வழங்கினார்.
கவிஞர் கவிமுகில் பேசுகையில், "தொடர்ந்து ஹைக்கூவிற்கான பல்வேறு முன்னெடுப்புகளைச் செய்துவரும் "ஹைக்கூ முற்றத்தின்' பணி பாராட்டுக்குரியது. இனி ஆண்டுதோறும் நடைபெறும் "ஹைக்கூ முற்றம்' ஆண்டு விழாவையொட்டி, ஹைக்கூ கவிதைகளுக்கான போட்டி ஒன்றினை நடத்துங்கள். அதற்காக ரூ.10,000 பரிசினை நான் வழங்குகிறேன்'' என்றதும் அரங்கம் கரவொலி எழுப்பி வரவேற்றது.
இயக்குநரும், கவிஞருமான என்.லிங்குசாமி, "ஹைக்கூ நம்மை நமக்கே உணர்த்தக்கூடிய அழகிய கவிதை வடிவம். எனக்கு எப்போதாவதுதான் ஹைக்கூ தோன்றும். ஆனால், அந்தக் கணம் மிகுந்த மனநிறைவை அளிப்பதாக இருக்கும். தமிழில் ஹைக்கூவை வளர்த்தெடுத்த கவிக்கோ அப்துல் ரகுமான் பிறந்த நாளையொட்டி கடந்த ஐந்து ஆண்டுகளாக ஹைக்கூ கவிதைப் போட்டியை நடத்தி, பல்லாயிரம் புதிய ஹைக்கூ கவிஞர்களை உருவாக்கியிருக்கிறோம். இனி, ஹைக்கூ பயிலரங்குகளை நாம் நடத்திடவேண்டும்' என்று நம்பிக்கை மிளிர தெரிவித்தார்.
"ஹைக்கூ முற்றம்' இரண்டாம் ஆண்டுத் தொடக்க விழாவையொட்டி, 2025-ஆம் ஆண்டு வெளியான ஹைக்கூ கவிதை நூல்களுக்காக நடத்தப்பட்ட போட்டியில் சுமார் 40-க்கும் மேற்பட்ட நூல்கள் பங்கேற்றன. அதில் தேர்வான நூல்களுக்கான பரிசுகளைத் தமிழக அரசின் மேனாள் தலைமைச் செயலாளரும் எழுத்தாளருமான வெ.இறையன்பு வழங்கினார். முதல் பரிசினை காவல்துறை கண்காணிப்பாளர் மணி சண்முகமும் (சற்றே நெளியும் மிதிவண்டி - ரூ5000/-), இரண்டாம் பரிசினை இயக்குநர் சரணும் (நீர் மேல் எழுத்துகள் - ரூ.3000/-), மூன்றாம் பரிசினை வழக்கறிஞர் சேலம் பொ.செந்திலரசும் (மலரத் துடிக்கும் சாக்யநெருஞ்சி - ரூ. 2000/-), சிறப்புப் பரிசுகளாக தலா ரூ.1000/- பரிசுத்தொகையினைக் கவிஞர்கள் செந்தமிழ் சீனிவாசன், மேசி சுரேஷ், ச. இராஜ்குமார், சா.கா. பாரதிராஜா, அ.சுந்தர செல்வன் ஆகியோரும் பெற்றுக்கொண்டனர்.
"ஹைக்கூ பேருரை' ஆற்றிய எழுத்தாளர் வெ.இறையன்பு பேசுகையில், "தமிழ் இலக்கியத்திற்கும் ஜப்பானிய இலக்கியத்திற்குமுள்ள நெருக்கமான உறவே ஹைக்கூ கவிதைகளின் மூலமாக மீண்டும் உறுதியாகியுள்ளது. ஹைக்கூ என்பது உணர்ச்சிக் கவிதையாகும். வெறும் சொற்களை மட்டும் கொண்டு ஹைக்கூ எழுதிவிட முடியாது. ஹைக்கூ என்பது நம் மனதில் கவிதையாகி, அதுவே தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும். செறிவான மொழியும் காட்சியழகும் சேரும்போது சிறந்த ஹைக்கூ கவிதைகளைப் படைத்திடமுடியும். ஹைக்கூ கவிஞர்கள் இப்படியோர் அமைப்பாக ஒருங்கிணைந்து மாதாந்திர நிகழ்வுகளை முன்னெடுப்பது பாராட்டிற்குரியது. உங்கள் தேடலிலும் தொடர்முயற்சியிலும் சரியான ஹைக்கூ கவிதைகளைக் கண்டடைவீர்கள்'' என்று மிகவும் காத்திரமானதோர் உரையினை வழங்கிச் சிறப்பி த்தார்.
பின்னர் நடைபெற்ற "ஹைக்கூ வாசிப்பரங்கத்தை' கவிஞர் சீ.பாஸ்கர் ஒருங்கிணைத்தார். ஹைக்கூ வாசிப்பரங்கத்தில் சிறந்த ஹைக்கூ கவிதைகளை வாசித்த கவிஞர்களுக்குப் புத்தகப் பரிசுகள் வழங்கப்பட்டன.
நிறைவாக, "ஹைக்கூ முற்றம்' ஒருங்கிணைப்பாளர் கவிஞர் மு.முருகேஷ் நன்றி கூறுகையில், "இது தானா சேர்ந்த கூட்டம். ஹைக்கூ கவிதைகள் மீதான ஆர்வமும் ஈடுபாடுமே இவ்வளவு கவிஞர்களை இங்கே ஓரிடத்தில் கொண்டுவந்து சேர்த்துள்ளது. மகாகவி பாரதி அறிமுகம் செய்ய, கவிக்கோ அப்துல்ரகுமான், மகாகவி ஈரோடு தமிழன்பன், ஓவியக்கவிஞர் அமுதபாரதி, பாவலர் அண்ணன் அறிவுமதி, ஹைக்கூ குயில் அக்கா மித்ரா ஆகியோரின் தொடர் ஹைக்கூ படைப்புகளால் இன்றைக்குத் தமிழில் தவிர்க்கமுடியாத ஒரு கவிதை வடிவமாக ஹைக்கூ நிலைபெற்றிருக்கிறது. தமிழில் எழுதப்படும் ஹைக்கூ கவிதைகள் ஜப் பானிய மொழியில் மொழியாக்கம் செய்யப்படும் உயரிய நிலையை இன்றைக்கு எட்டியுள்ளன. அதனை இன்னும் மேலெடுத்துச்செல்ல இப்படியான நிகழ்வுகள் நமக்குத் துணையாக இருக்கும்' என்றார்.
விழாவில், "கவிதை உறவு' ஆசிரியர் ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணன், இயக்குநர் பிருந்தாசாரதி, கவிஞர் இளம்பிறை, முனைவர் ஆதிரா முல்லை, "பொதிகை மின்னல்' ஆசிரியர் வசீகரன், "வளசரவாக்கம் செய்தி மடல்' ஆசிரியர் தொடுவானம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
"ஹைக்கூ வாசிப்பரங்கில் வாசித்த முத்துக்களில் சில:
சோளக்காட்டுப் பொம்மை.
துளித்துளியாய் வானம்.
வடையை.
தனிமையில் பூக்காரி.
அருகில் வந்த தெருநாய்.
கூட்டுக்குடும்பமானது.
நனைந்த அணில்.
ஆழத்தில் அமைதியாய் மீன்கள்.
மழலையின் மணல் வீடு.
பனிமூட்டம் விலகும்வரை.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)