Arts, culture, entertainment and media
ஏஐ, மெட்டாவினால் உருவானவை அல்ல; உண்மையான 80ஸ் புகைப்படங்கள்..! குஷ்பு பகிர்ந்த விடியோ!

சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நடிகை குஷ்பு பகிர்ந்த விடியோ குறித்து...
நடிகை குஷ்பு பகிர்ந்த 80ஸ் புகைப்படங்கள் - படங்கள்: இன்ஸ்டா / குஷ்பு சுந்தர்
நடிகை குஷ்பு பகிர்ந்த நிஜமான 80ஸ் புகைப்படத் தொகுப்பு விடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.
சமூக வலைதளத்தில் ஏஐ மூலம் எடிட் செய்யப்பட்ட புகைப்படங்கள் ஏதாவது ஒரு புதிய டிரெண்ட்டை உருவாக்கி இருக்கும். அதுபோல, தற்போது 80ஸ் வின்டேஜ் புகைப்படங்கள் டிரெண்டாக இருக்கின்றன.
இணையத்தில் பலரும் தங்களது புகைப்படங்களை ஏஐ மூலம் எடிட் செய்து 80களில் தாங்கள் இப்படி இருப்போம் என பகிர்ந்து வருகிறார்கள். இந்த டிரெண்டிங்கில் நடிகை குஷ்புவும் இணைந்துள்ளார்.
நடிகை குஷ்பு பகிர்ந்த புகைப்படங்களில் எவையுமே எடிட் செய்யப்படாமல், உண்மையாகவே அந்தக் காலகட்டத்தில் எடுத்த புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அது ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது.
தனது இன்ஸ்டா பக்கத்தில் இந்தப் புகைப்பட தொகுப்பை விடியோவாக வெளியிட்டுள்ள நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு கூறியிருப்பதாவது:
ஏஐ, மெட்டாவினால் உருவாக்கப்பட்டவை அல்ல. அசலான 80ஸ் புகைப்படங்கள் எனக் கூறியுள்ளார். பின்னர் ஹேஷ்டேக்கில் 80ஸ் டிரெண்ட் எனவும் ஒரிஜினல் எனவும் பதிவிட்டுள்ளார்.
நடிகை குஷ்பு சமீபத்தில் தனது உடல் எடையைக் குறைத்ததும் கவனிக்கத்தக்கது. கடைசியாக அவர் நடிப்பில் டபுள் ஆகுபன்சி திரைப்படம் வெளியானது. முதல்வர் விஜய்யுடன் வாரிசு படத்தில் அவர் நடித்த காட்சிகள் நீக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
Not AI or Meta—authentic 80s photos! A video shared by Khushbu!
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.