Arts, culture, entertainment and media
அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சி: தமிழ்நாடு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் கோரிக்கைகள் வலியுறுத்தி கள்ளக்குறிச்சியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கலெக்டர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் மோகன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர்கள் கேசவ ராமானுஜம், முத்துசாமி, சாந்தி, கண்ணன், பாவாணன், செல்வராஜன், மனுவேல், சடகோபன், ஜெயக்குமார் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் அன்பழகன் கோரிக்கை விளக்கவுரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில், ஓய்வூதியர் மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள குளறுபடிகளை நீக்க வேண்டும். விடுபட்ட மற்றும் புதிய ஓய்வூதியர்கள் அனைவருக்கும் மருத்தவ காப்பீடு அட்டையை தடையின்றி வழங்கிட வேண்டும்.
பட்டியலிடப்பட்ட அனைத்து மருத்துவமனைகளிலும் முழுமையான பணமில்லா சிகிச்சையைத் தடையின்றி உறுதி செய்ய வேண்டும். அவசர சிகிச்சைகளுக்கு அரசு அங்கீகரிக்காத மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றாலும் அதற்கான மருத்துவ செலவுத் தொகையை முழுமையாக அரசு ஏற்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.