Religion
மகா கும்பாபிஷேகம்
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே பட்டக்காரன்பாளையத்தில், பழமை வாய்ந்த ஸ்ரீ திம்மராயப் பெருமாள் கோவிலில், திருப்பணிகள் மேற்கொண்டு, மகா கும்பாபிஷேகத்துக்காக, அரண்மனை வடிவில் யாகசாலையும் அதில், 9 ஹோம குண்டங்கள் மற்றும் பிராதனத்துடன் சேர்த்து 7 வேதிகைகளும் அமைக்கப்பட்டன.
கடந்த 15ம் தேதி, இரும்பொறை கைலாசநாதர் கோவிலில் இருந்து முளைப்பாரி விமான கலசம் ஊர்வலமாக, இரும்பொறை சொக்கலிங்கேஸ்வரர் கோவிலில் எடுத்து வரப்பட்டு திம்மராயப் பெருமாள் கோவிலை அடைந்தது. நேற்று காலை 7.30 மணியளவில், மூலவர். விமானம், தோரண வாயில் ராஜகோபுரம் உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது. விழா ஏற்பாடுகளை, நிர்வாக குழுவினர், அறங்காவலர்கள் மற்றும் விழா குழுவினர் செய்தனர்.--