மது குடிக்க பணம் தராததால் கூலித்தொழிலாளி தற்கொலை
குமாரபாளையம்:குமாரபாளையம், அசோகபுரம் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல், 41; விசைத்தறி கூலித்தொழிலாளி. இவருக்கு
அசோகபுரம் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல், 41; விசைத்தறி
கூலித்தொழிலாளி. இவருக்கு குடிக்கும் பழக்கம் உள்ளது. நேற்று
முன்தினம் குடிப்பதற்கு, மனைவி பவித்ராவிடம் பணம் கேட்டுள்ளார்.
தர மறுத்ததால், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கூரை வீட்டில், ஆடு
கட்டும் கயிற்றால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.வெளியில்
சென்ற பவித்ரா வீட்டுக்கு வந்து பார்த்தபோது அதிர்ச்சியடைந்தார்.
அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு, குமாரபாளையம் அரசு
மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்,
தங்கவேல் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து
குமாரபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.