Economy, business and finance
நகை, பணம் கொள்ளை மேலும் ஒருவர் சிக்கினார்
ஆத்துார்: கெங்கவல்லி அருகே மண்மலை பாலக்காடை சேர்ந்தவர் கணேசன். அரசு பள்ளியில் உதவியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கூடமலையை சேர்ந்தவர் மலர்விழி. இவர்கள் வீடு-களில், கடந்த ஜூலை, 18ல், 14 பவுன் நகைகள், 1.50 லட்சம் ரூபாய் கொள்ளை போனது. கெங்கவல்லி, தம்மம்பட்டி போலீசார், தனித்தனியே வழக்குப்பதிந்தனர். இதில், செந்தாரப்-பட்டி மற்றும் திருச்சியை சேர்ந்த, 9 பேரை, தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
தம்மம்பட்டி ஸ்டேஷனில் பதிவு செய்த வழக்கில், தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த முருகன் மகன் செல்வம், 20, என்பவரும் தொடர்பில் இருந்தது தெரிந்தது. இவர், கஞ்சா விற்ற வழக்கில், திருநெல்வேலி, அம்பாசமுத்திரம் போலீசார் கைது செய்து, பாளையங்கோட்டை சிறையில் அடைத்திருந்தனர். அவரை, கெங்கவல்லி போலீசார், நேற்று காவலில் எடுத்து விசா-ரித்தனர். தொடர்ந்து ஆத்துார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பாளையங்கோட்டை சிறைக்கு அனுப்பினர்.
