வறட்சியால் பாதித்த மா விவசாயிகள் நிவாரண தொகை வழங்க தீர்மானம்
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்டக்குழு கூட்டம், வட்ட தலைவர்
மாவட்டம் பர்கூரில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க வட்டக்குழு கூட்டம்,
வட்ட தலைவர் முனுசாமி தலைமையில் நடந்தது.
மாவட்ட தலைவர் கண்ணு, தேசிய மற்றும் மாநில அரசியல் குறித்து பேசினார்.
மாநிலக்குழு உறுப்பினர் ராமமூர்த்தி, மாநில மற்றும் மாவட்ட குழு
முடிவுகள் தொடர்பாக பேசினார். வட்ட செயலாளர் ரூபேஷ் மற்றும்
வட்டக்குழு உறுப்பினர்கள் பவுன்ராஜ், ராஜேந்திரன், சவுக்கத் அலி,
கமலக்கண்ணன், சார்லஸ் உள்பட பலர் பங்கேற்றனர். வட்ட துணை செயலாளர்
சீனிவாசன் நன்றி கூறினார்.கூட்டத்தில், பர்கூர் பேரூராட்சி
வாரச்சந்தையில், நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட கூடுதலாக
வசூலிப்பதை தடுக்க வேண்டும். ஒப்பந்த விபரங்கள் மற்றும் கட்டணங்களை
பொதுமக்களுக்கு தெரியும் வகையில், தகவல் பலகை அமைக்க வேண்டும்.
கடுமையான வறட்சியால் கிருஷ்ணகிரி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக
அறிவிக்க வேண்டும். விவசாயிகளின் அனைத்து விவசாய கடன்களையும்
முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். வறட்சியால் பாதிக்கப்பட்ட
விவசாய பயிர்களுக்கு, உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும்.
பாதித்த, 'மா' விவசாயிகளுக்கு ஏக்கருக்கு, 50,000 ரூபாய்
நிவாரணத்தொகை வழங்க வேண்டும். வனவிலங்குகளால் பாதிக்கும்
விவசாயிகளுக்கு ஒரே மாதிரியான நஷ்டஈடு வழங்க வேண்டும். 'மா'
விவசாயிகளின் நலன் கருதி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு சார்பில்,
மாங்கூழ் தொழிற்சாலை அமைக்க வேண்டும், என்பன உள்ளிட்ட தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டன.