கி.கிரியை வறட்சி மாவட்டமாக அறிவிக்க கூட்டத்தில் தீர்மானம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகியில் வறட்சி நிலவுதால், வறட்சி மாவட்டமாக அறி-விக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் தாலுகா பட்லப்பள்ளி பஞ்., கொங்கன் தெரு கிராமத்தில், தமிழ் மாநில விவசாய சங்க தொடக்க விழா நடந்தது. வட்டக்குழு உறுப்பினர் சார்லஸ் தலைமை வகித்தார். விவசாய தொழிலாளர் சங்கத்தலைவர் கண்ணு, விவசாய தொழிலாளர்கள் பிரச்னைகள் குறித்து பேசினார். இதில், சங்கத்தலைவராக பூங்கொடி, செயலாளராக சரிதா, பொருளாளராக செல்வி ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். வட்டக்குழு உறுப்பினர் கல்பனா நன்றி கூறினார்.கூட்டத்தில், புதிதாக கட்டியுள்ள மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி
உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். தமிழக அரசு அறிவித்தபடி, 125 நாட்கள் அனைவருக்கும் வேலை கொடுக்க வேண்டும். வேலை செய்ய முடியாத முதியோர்க-ளுக்கு, 3,000 ரூபாய் ஓய்வூதியம் வழங்க வேண்டும். வீடு இல்-லாத விவசாய தொழிலாளர்களுக்கு வீட்டுமனை ஒதுக்கி வீடு கட்-டித்தர வேண்டும். பட்டா வழங்காமல் இருக்கும் விவசாய தொழிலாளர்களுக்கு உடனடியாக பட்டா வழங்க வேண்டும். பள்ளி மாணவர்களின் நலன் கருதி, திருப்பத்துாரில் இருந்து மீண்டும் கோத்தலகுட்டா வழியாக பர்கூருக்கு, பி10 பஸ்சை இயக்க வேண்டும். கூட்டுறவு வங்கிக்கடனை முழுமையாக தள்-ளுபடி செய்ய வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்,
என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.