பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!

பிகாரில் அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக் கோரி, தேர்வர்கள் பேரணி நடத்தியது குறித்து...
பிகாரில் அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக் கோரி, தேர்வர்கள் செவ்வாய்க்கிழமை (செப். 15) பேரணி நடத்தினர்.
பிகாரின் பாட்னாவில், பல அரசுப் பணியாளர் தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் குற்றம்சாட்டி, அதனை ரத்து செய்யக் கோரி தேர்வர்கள் பேரணி நடத்தினர்.
பிகார் அரசுப் பணியாளர் தேர்வாணையம் (பிபிஎஸ்சி) நடத்திய 70 ஆவது தேர்வையும், பிகார் காவல்துறை ஆணையத்தின் மூலம் நடத்தப்பட்ட 1,799 உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான தேர்வையும் ரத்து செய்யக்கோரி போராட்டக்காரர்கள் நிபந்தனைகள் விடுத்தனர்.
மேற்குறிப்பிட்ட தேர்வுகளில் பல முறைகேடுகள் நடைபெற்றதாகவும் எனவே, தேர்வுகள் மீண்டும் நடத்தப்பட வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
போராட்டக்காரர்கள் காந்தி திடலிலிருந்து பேரணியைத் தொடங்கி முதல்வர் இல்லத்தை நோக்கிச் சென்றனர். ஆனால், ஜே.பி. கோலம்பரில் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
இந்த நிலையில், போராட்டக்காரர்கள் சிலர் ரயில்வே தண்டவாளங்களை இறங்கி ரயில்களை மறிக்க முயன்றதாகவும், சிலர் தடைசெய்யப்பட்ட பகுதிகளுக்குள் நுழைந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
காவல்துரையினரால்தடுத்தி நிறுத்தப்பட்ட போராட்டக்காரர்கள். - படம் - பிடிஐ
Candidates held a rally in Bihar on Tuesday (Sept. 15) demanding the cancellation of government job examinations.
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.