Politics
கவரிங் நகை கொடுத்து ரூ.3 லட்சம் மோசடி; சேலம் வாலிபர்கள் கைது
ஈரோடு:ஈரோடு சூரம்பட்டி எஸ்.கே.சி., சாலையை சேர்ந்தவர் சிங்காரம், 54; அதே பகுதியில் ஸ்ரீபகவதி அம்மன் பைனான்ஸ்
சூரம்பட்டி எஸ்.கே.சி., சாலையை சேர்ந்தவர் சிங்காரம், 54; அதே
பகுதியில் ஸ்ரீபகவதி அம்மன் பைனான்ஸ் மற்றும் நகை அடகு கடை நடத்தி
வருகிறார். சிங்காரம், அவரது மனைவி கடையில் இருந்தபோது இரு
வாலிபர்கள் வந்தனர்.
அதில் ஒருவர் அவசர தேவைக்காக பணம் வேண்டும்
எனக்கூறி, தங்கச்சங்கிலி கொடுத்துள்ளார். நகையின் கொக்கியை
சிங்காரம் உரசியபோது, முழு செயினும் தங்கமாக இருக்கலாம் என
நினைத்து, செயினை எடை பார்த்துள்ளார். 30 கிராம் எடை இருந்ததால், 3.06
லட்சம் தந்துள்ளார்.
செய்தபோது கொக்கியை தவிர மற்ற பகுதி கவரிங் என்பது தெரிந்து அதிர்ச்சி
அடைந்தார். ஈரோடு சூரம்பட்டி போலீசில் புகாரளித்தார். விசாரணையில்
போலி நகை கொடுத்து ஏமாற்றி பணம் பறித்தது, சேலம் கோட்டை பால்வீதியை
சேர்ந்த சாகுல் ஹமீது மகன் அம்ஜித், 29; சேலம் குகை மாரியம்மன் கோவில்
பகுதியை சேர்ந்த குமார் மகன் மோகன்ராஜ், 30, என்பது தெரியவந்தது.
இருவரையும் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
படுத்தி மாவட்ட சிறையில் அடைத்தனர்.