Economy, business and finance
மூல்கில்துறைபட்டு அருகே வீடு புகுந்து நகை பணத்தை கொள்ளையடித்த வாலிபர் அதிரடி கைது

மூங்கில்துறைப்பட்டு: பூட்டிய வீட்டின் கதவைத் திறந்து 14 சவரன் நகை மற்றும் ஒரு லட்சம் பணத்தை திருடி சென்ற கொளையனை 24 மணி நேரத்தில் மூங்கில்துறைப்பட்டு போலீசார் பிடித்து அவரிடமிருந்த நகை மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், மூங்கில்துறைப்பட்டு அடுத்த சீர்பாத நல்லுார் கிராமத்தை சேர்ந்த தண்டபாணி, 44; இவர் செப்.8 காலை வீட்டின் கதவை பூட்டி விட்டு 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் நடைபெறும் ஏரி வேலைக்கு சென்றுள்ளனர்.
மீண்டும் மதியம் வீட்டிற்கு வந்து பார்க்கும் போது,வீட்டின் கதவு திறந்துகிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவை உடைத்து அதில் இருந்த 14 சவரன் தங்க நகை, 280 கிராம் வெள்ளி மற்றும் ஒரு லட்சம் ரொக்க பணம் கொள்ளை போனது தெரியவந்தது.
தகவல் அறிந்த மூங்கில்துறைப்பட்டு இன்ஸ்பெக்டர் சாலமன் ராஜா,சப் இன்ஸ்பெக்டர் அம்பிகா மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை செய்தனர். விசாரணையில் சவேரியார்பாளையத்தை சேர்ந்த சரவணன் மகள் கிருபா கிருஷ், 23; என்பவர் இப்பகுதியில் இருந்தது தெரியவந்தது.
இதன் பேரில் கிருபா கிஷ்ைஷ போலீசார் கைது செய்து ,அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில் அவர் வீடு புகுந்து பிரோவில் இருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டார். பின்னர் போலீசார் அவரிடமிருந்து நகை,பணம் மற்றும் பைக்கை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கொள்ளை சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள் குற்றவாளியை கைது செய்த அவரிடமிருந்து நகை மற்றும் பணத்தை பறிமுதல் செய்த போலீசாரை உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.