Arts, culture, entertainment and media
‘டிசி’ பட வெற்றி எதிரொலி: அருண் மாதேஸ்வரன், லோகேஷ் கனகராஜூக்கு கார் கிஃப்ட்!

‘டிசி’ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து படத்தின் இயக்குநர், நடிகர், மற்றும் இசையமைப்பாளருக்கு BMW காரை தயாரிப்பாளர் கலாநிதி மாறன் பரிசாக வழங்கினார்.
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘டிசி’. இந்தப் படத்தில் வாமிகா கபி, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி நாயகிகளாக நடித்திருந்தனர். படத்துக்கு அனிருத் இசையமைத்தார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்தது.
படம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இதனால், ரூ.25 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இந்தப் படம் உலக அளவில் ரூ.100 கோடி வசூலை குவித்தது.
படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் தமிழகத்தில் வெளியிட்டது. படம் தற்போது சன் நெக்ஸ்ட் ஓடிடியில் காணக்கிடைக்கிறது. குறிப்பாக படத்தின் பின்னணி இசை ரசிகர்களால் சிலாகிக்கப்பட்டது. இந்நிலையில், இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் அருண் மாதேஸ்வரன், நடிகர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோருக்கு தயாரிப்பாளர் கலாநிதி மாறன் BMW கார்களை பரிசாக வழங்கினார்.
டெங்கு பரவல்: “கர்ப்பிணிகளுக்கான சிகிச்சையில் கூடுதல் கவனம் வேண்டும்” - பொது சுகாதாரத்துறை!
பாதிப்புடன் வரும் கர்ப்பிணிகளை அலட்சியப்படுத்தாமல் கண்காணிக்க வேண்டும்.
காய்ச்சல் பாதிப்புள்ள கர்ப்பிணிகளை தொடர் கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் டெங்கு பரவல் அதிகரித்துள்ள நிலையில் பொதுசுகாதாரத்துறை எச்சரிக்கை.
