விரைவில் தங்க மோதிர திட்டம் கண்காணிப்பு அலுவலர் தகவல்
கரூர்,;தாய்மாமன் தங்க மோதிர திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும், என, கரூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர்
தங்க மோதிர திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்,'' என, கரூர் மாவட்ட
கண்காணிப்பு அலுவலர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்.
மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த,
ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. அதில் பங்கேற்ற, தமிழ்நாடு குடிநீர்
வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநரும், கரூர் மாவட்ட கண்காணிப்பு
அலுவலருமான தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறியதாவது:
உணவு திட்டம், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை, அரசு பள்ளி மாணவர்களுக்கு
விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதன் மூலம், கரூர் மாவட்டத்தில், 774
பள்ளிகளை சேர்ந்த, 37 ஆயிரத்து, 426 மாணவர்கள் பயன்பெறுவர்.
அதேபோல், தாய்மாமன் தங்க மோதிர திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது.
மாவட்டத்தில் குடிநீர் வினியோக சீரமைப்பை உறுதி செய்யவும்,
திட்டப்பணிகளை விரைந்து முடிக்கவும், அதிகாரிகளுக்கு
அறிவுறுத்தப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு தேவையான விதைகள்,
உரங்கள் தேவையான அளவில் உள்ளது. நீர்வளத்துறை மற்றும் இதர பணிகள்
சிறப்பு துார்வாரும் திட்டத்தின் கீழ், 179.16 கி.மீ., நீளமுள்ள, 33
துார்வாரும் பணிகள், 6.38 கோடி ரூபாய் மதிப்பில் நிறைவு
செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
மாவட்ட கலெக்டர் முத்துக்குமரன், டி.ஆர்.ஓ., விமல்ராஜ், மாநகராட்சி
ஆணையாளர் பிரித்திவிராஜ், துணை கலெக்டர்கள் வெங்கடேஷ்வரன், சேஷத்ரி
மயும் தீபுசானு உள்பட பலர் பங்கேற்றனர்.
