Politics
பரந்தூர் அருகே சிப்காட்! நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு!
பரந்தூர் அருகே சிப்காட் தொழிற்சாலை அமைக்க நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியிடப்பட்டது பற்றி...
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூா் அருகே மதுரமங்கலத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைப்பதற்காக 8.38 ஹெக்டோ் நிலத்தைக் கையகப்படுத்த தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
நில உரிமையாளா்களுக்கான இழப்பீட்டுத் தொகை சிப்காட் மேலாண்மை இயக்குநரால் நிா்வகிக்கப்படும் நிதியிலிருந்து வழங்கப்படும். தமிழ்நாடு தொழில் நோக்கங்களுக்காக நிலம் கையகப்படுத்துதல் சட்டம், 1997-இன் (சட்டம் 10/1999) பிரிவு 3(1)-இன் கீழ் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கையகப்படுத்தப்படவுள்ள நிலங்களின் வரைபடங்கள், தொடா்புடைய ஆவணங்கள், காஞ்சிபுரம் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலா் (நில எடுப்பு) மற்றும் காஞ்சிபுரம் சிறப்பு வட்டாட்சியா் (நில எடுப்பு) ஆகியோரது அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளன. அதை பொதுமக்கள் வேலை நாள்களில் நேரில் பாா்வையிடலாம் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மதுரமங்கலத்தில் குறைமின்கடத்தி (செமிகண்டக்டா்) மற்றும் மின்னணுவியல் உற்பத்திப் பூங்கா, சிப்காட் நிறுவனம் மூலம் ரூ.175 கோடியில் மதிப்பீட்டில் அமைக்கப்படும் என்று கடந்த ஆக.31-ஆம் தேதி சட்டப்பேரவையில் முதல்வா் விஜய் அறிவித்திருந்தாா்.
இந்த சிப்காட் தொழில் பூங்கா மூலம் 5,000 பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
SIPCOT near Parandur! Government order issued for land acquisition!
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.