Arts, culture, entertainment and media
ஒரு மாதமாக குடிநீர் வழங்கல மறியலில் ஈடுபட்ட பெண்கள்
மடத்துக்குளம்: மடத்துக்குளம் பாப்பான்குளத்தில், குடிநீர் கேட்டு பொதுமக்கள் ரோடு மறியலில் ஈடுபட்டனர்.
மடத்துக்குளம் ஒன்றியம், பாப்பான்குளம் ஊராட்சியில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். திருமூர்த்தி அணையிலிருந்து, மடத்துக்குளம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ், குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
கடந்த ஒரு மாதமாக முறையாக குடிநீர் வினியோகம் இல்லாமல், கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வந்தது. இது குறித்து அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் கண்டு கொள்ளாததால், அதிருப்தியடைந்த பெண்கள், காலி குடங்களுடன், ரோடு மறியலில் ஈடுபட்டனர்.
போலீசார், அதிகாரிகள் பேச்சு நடத்தி, சீரான குடிநீர் வினியோகம் செய்யப்படும் என உறுதியளித்தனர். இதனையடுத்து, பெண்கள் கலைந்து சென்றனர்.