செப். 22ல் ஆர்.டி.ஓ., விவசாயிகள் குறைதீர் கூட்டம்
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு சிவகாசி சப்-கலெக்டர் அலுவலகம், அருப்புக்கோட்டை, சாத்துார் ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் செப். 22 காலை 11:00 மணிக்கு குறைதீர் கூட்டம் நடக்கிறது.
இதில் விவசாயம், தனி நபர் தொடர்பான மனுக்களை நேரடியாக அளித்து தீர்வு பெறலாம். மேலும் விவசாயம், விவசாயம் சாராத மனுக்களுக்கு விரைந்து தீர்வு காணவும், மனுவின் மீதான நடவடிக்கை விவரத்தை மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும் என அனைத்து துறை அலுவலர்களுக்கும் கலெக்டர் ஷரண்யா அறி தெரிவித்துள்ளார்.