Health
இல்லங்களில் குப்பையை பிரியுங்கள் நல்வாழ்வு கூட்டத்தில் வலியுறுத்தல்
குன்னூர்: இல்லங்களில் குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது அவசியம், என மக்கள் நல்வாழ்வு கூட்டத்தில்
இல்லங்களில் குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது அவசியம், என மக்கள் நல்வாழ்வு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
குன்னூர், அதிகரட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தின் கீழ் செயல்படும் கோடேரி துணை சுகாதார மையத்தில், மக்கள் நல்வாழ்வு குழு கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு ஊர் தலைவர் கோவிந்தராஜன் தலைமை வகித்தார்.
கூட்டத்தில், மருத்துவர் அபினேஷ், மக்கள் நல்வாழ்வு திட்டத்தின் கீழ் மக்களுக்கு அரசு வழங்கும் மருத்துவ பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் குறித்து பேசினார்.
அதிகரட்டி பேரூராட்சி மன்ற உறுப்பினர் மனோகரன் பேசுகையில், பொது சுகாதாரம் என்பது ஒவ்வொரு தனி மனிதனிடமிருந்து துவங்க வேண்டும். இல்லங்களிலேயே மட்கும், மட்காத குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது அவசியம். நமது குழந்தைகளுக்கு நோயற்ற ஆரோக்கியமான எதிர்காலத்தை
உருவாக்கி கொடுக்கும் பொறுப்பு சமுதாயத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் உண்டு என்றார்.
கூட்டத்தில், சுகாதார ஆய்வாளர் ஹரீஷ் குமார், செவிலியர் சுமதி, ஆஷா பணியாளர்கள் சித்ரா, யோகலட்சுமி உள்ளிட்ட சுகாதார பணியாளர்கள, பொதுமக்கள் பங்கேற்றனர்.