Politics
200 வாக்காளர்களுக்கு ஒரு கிளை: தி.மு.க., செயற்குழுவில் தீர்மானம்
செஞ்சி: தி.மு.க., செயற்குழு கூட்டத்தில் 200 வாக்காளர்களுக்கு ஒரு கிளை அமைக்க தீர்மானம் நிறை வேற்றினர்.
செஞ்சி அடுத்த ஊரணிதாங்கலில், விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் செஞ்சி, மயிலம் தொகுதி செயற்குழு கூட்டம் நடந்தது.
மாவட்ட அவை தலைவர் சேகர் தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன், மாவட்ட துணை செயலாளர்கள் அருணகிரி, அமுதா ரவிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
செஞ்சி கிழக்கு ஒன்றிய செயலாளர் விஜயகுமார் வரவேற்றார். மாவட்ட செயலாளர் மஸ்தான்,
தலைமை பிரதிநிதிகள் புதுச்சேரி மாநில அமைப்பாளர் சிவா, மாநில மாணவரணி செயலாளர் வீரமணி ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர்.
இதில், 30 ஆயிரம் வாக்காளர்கள் முதல் குறைந்தபட்சமாக 25 ஆயிரம் வாக்காளர்கள் எண்ணிக்கையில் ஒன்றியங்கள் அமைப்பதற்கும், 200 வாக்காளர்களுக்கு ஒரு கிளை அமைப்பதற்கும் கட்சி தலைமை அனுமதிக்க வேண்டும் என கேட்டு தீர்மானம் நிறைவேற்றினர்.
கூட்டத்தில் முன்னாள் எம்.எல்ஏ.,க்கள் மாசிலாமணி, சேதுநாதன், செந்தமிழ் செல்வன், தலைமை தீர்மான குழு உறுப்பினர் சிவா, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த், செயற்குழு உறுப்பினர் நெடுஞ்செழியன், ஒன்றிய சேர்மன்கள் வல்லம் அமுதா ரவிக்குமார், மயிலம் யோகேஸ்வரி மணிமாறன்,செஞ்சி பேரூராட்சி தலைவர் மொக்தியார் அலி மற்றும் ஒன்றிய செயலாளர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.