Arts, culture, entertainment and media
நடிகை சமந்தா பகிர்ந்த வளைகாப்பு புகைப்படங்கள்.. சமூக வலைதளங்களில் வைரல்!

நடிகை சமந்தாவின் வளைகாப்பு புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. ஈஷா யோகா மையத்தில் பாரம்பரிய முறையில் வளைகாப்பு நடைபெற்றது.
இன்ஸ்டா சமூக வலைதளப் பக்கத்தில் நடிகை சமந்தா பகிர்ந்த அவரது வளைகாப்பு நிகழ்ச்சி புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
திரைப்படத் தயாரிப்பாளர் ராஜ் நிடிமோருவை இரண்டாவதாக மணந்த சமந்தா, தற்போது கருத்தரித்து குழந்தையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார். இந்நிலையில் ஈஷா யோகா மையத்தில் பாரம்பரிய முறையில் நடைபெற்ற தனது வளைகாப்பு வீடியோவை சமந்தா வெளியிட்டுள்ளார்.
பிறப்பால் கிறிஸ்தவரான சமந்தா, இந்திய பாரம்பரிய நடைமுறைகள் மீது தான் எப்போதுமே மிகுந்த மரியாதை வைத்திருப்பதாகவும், அவற்றுக்கு ஆழமான பொருள் இருப்பதை உணர்ந்திருப்பதாகவும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீசக்ர யந்திரத்தில் அமரவைத்து நடத்தப்பட்ட இந்த பாரம்பரிய வளைகாப்பில் தாயே, தெய்வமாக கருதப்படுவதாகவும் உணர்ச்சிப்பூர்வமாக சமந்தா குறிப்பிட்டுள்ளார்.
