மது போதையில் வாலிபரை வெட்டிய நப் கைது
செங்கல்பட்டு, செப். 11--– திம்மாவரத்தில் மது போதையில் வாலிபரை வெட்டிய, செல்லப்பெருமாள், 52, என்பவர் கைது
திம்மாவரத்தில் மது போதையில் வாலிபரை வெட்டிய, செல்லப்பெருமாள், 52, என்பவர் கைது செய்யப்பட்டார்.
செங்கல்பட்டு அடுத்த திம்மாவரம் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி, 29: தனியார் நிறுவன ஊழியர். இவர், நேற்று முன்தினம் நள்ளிரவு பணி முடித்து இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.
திம்மாவரத்தில் காஞ்சிபுரம் –- செங்கல்பட்டு நெடுஞ்சாலையில் வந்தபோது, அதே பகுதியை சேர்ந்த செல்லப்பெருமாள், 52, பாலாஜியிடம் லிப்ட் கேட்டு தன் விவசாய நிலத்தில் இறக்கி விடுமாறு கூறியுள்ளார். பின் இருவரும்
விவசாய நிலத்திற்கு சென்று கொட்டகையில் அமர்ந்து மது அருந்தி உள்ளனர். மது போதையில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில், ஆத்திரமடைந்த செல்லப்பெருமாள், மரம் வெட்டும் கத்தியால் பாலாஜியின் தலையில் வெட்டியுள்ளார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், பாலாஜியை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு 22 தையல்கள் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிந்து, செல்லப்பெருமாளை கைது செய்து செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.